ஐந்து மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் படுதோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
மொத்தமாக பார்த்தால் நடைபெற்ற அந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் மட்டுமே தற்போது ஆட்சி அமைத்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளதால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.
அதன்படி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளும் கட்சியின் கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.