ரியல்மி நிறுவனம், Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று (மார்ச் 10) இந்தியாவில் வெளியிட்டது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரியல்மி 5ஜி போன் மார்ச் 14ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
அந்தவகையில், குறைந்த விலை ரியல்மி 5ஜி போனான,
Realme 9 5G
ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே,
Mediatek Dimensity
810 புராசஸர், 5000mAh பேட்டரி போன்ற மேம்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கா பட்ஜெட் புராசஸர் – Realme அறிமுகம் செய்த 9 SE 5G போன்!
ரியல்மி 9 5ஜி அம்சங்கள் (Realme 9 5G Features)
ரியல்மி 9 எஸ்இ போனில் 6.5″ அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 2412×1080 பிக்சல் திறன் கொண்ட இந்த டிஸ்ப்ளே, 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவைப் பெற்றுள்ளது. 405ppi திரை அடர்த்தியை இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்ட ரியல்மி UI 2.0 ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி புராசஸர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மாலி கிராபிக்ஸ் எஞ்சினும் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.
ரியல்மி 9 5ஜி கேமரா (Realme 9 5G Camera)
பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்ட அமைப்பை ரியல்மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் முதன்மை சென்சாராக Samsung 48 மெகாபிக்சல் f/1.8 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும் இருக்கிறது.
செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் Sony IMX471, f/2.1 அபெர்ச்சர் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்க கேமரா மற்றும் செல்பி கேமரா உதவியுடன் 1080p தரத்தில் முழு அளவு எச்டி படங்களை பதிவு செய்ய முடியும்.
ரியல்மி 9 5ஜி பேட்டரி (Realme 9 5G Battery)
ஸ்மார்ட்போனின் செயல்திறனை ஊக்குவிக்க 4ஜிபி, 6ஜிபி என இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியாக 64ஜிபி, 128GB ஆகிய இரு விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. இதனை எஸ்டி கார்ட் ஆதரவு கொண்டு, 1TB வரை நாம் நீட்டிக்க முடியும்.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 18W டார்ட் சார்ஜர் போனுடன் கொடுக்கப்படுகிறது.
அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த ரியல்மி போன் பெறுகிறது.
ரியல்மி 9 5ஜி விலை (Realme 9 5G price in india)
Meteor Black, StarGaze White ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதன் 4ஜிபி ரேம் + 64 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.17,499 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன் இருக்க வேற என்ன வேணும்!
பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் மார்ச் 14ஆம் தேதி Realme 9 SE 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Realme 9 5G Specifications
பெயர்ரியல்மி 9 5ஜிஅளவு162.5x 74.8 x 8.5 மில்லிமீட்டர்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 11 (ரியல்மி UI 2.0)புராசஸர்மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி சிப்செட் + மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின்திரை6.5″ அங்குல முழுஅளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரை, 90Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட், 480 நிட்ஸ் பிரைட்னஸ், 405ppi பிக்சல் அடர்த்திதெளிவுதிறன்2400*1080 பிக்சல்கள்பின்புற கேமரா42 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/1.9) + 2 மெகாபிக்சல் பிளாக் & வைட் சென்சார் (f/2.4)+ 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் (f/2.4)முன்புற கேமரா16 மெகாபிக்சல் செல்பி (f/2.1)ஸ்லாட்இரண்டு 5ஜி நானே சிம் + ஒரு எஸ்டி கார்ட் (1TB வரை)ரேம்4ஜிபி, 6ஜிபிஸ்டோரேஜ்64ஜிபி, 128ஜிபிஆதரவுவைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப்இடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி5000mAh / 15W டார்ட் சார்ஜிங் ஆதரவுநிறங்கள்மீட்டியார் பிளாக், ஸ்டார்கேஸ் வைட்எடை188 கிராம்விலை4ஜிபி + 64ஜிபி – ரூ.14,999 | 6ஜிபி + 128ஜிபி – ரூ.17,499