புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.
கட்டுப்பாடுகள்
கடந்த ஆண்டு, அசாம், தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல்கள் நடந்ததால், அப்போது தேர்தல் கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப் பட்டது.இந்த கட்டுப்பாடுகளுடன், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன.இங்கே நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இந்நிலையில், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தேர்தல் கமிஷன் அறிவித்தது.நீக்கம்அதன் விபரம்:ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்தபோது, கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது.அதனால், மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசித்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. தற்போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement