கடந்தாண்டு மே மாதம் நடந்த அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின்போது கொரோனா காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால், மாநிலத்தில் நிலைமையை பொறுத்து, படிப்படியாக கட்டுப்பாடுகளை ஆணையம் தளர்த்தி வருகிறது. அதன்படி, 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது, வெற்றி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது.