உக்ரைன் போரின் தாக்கம் தகவல் தொழில் நுட்ப துறையிலும் எதிரொலித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு பல இந்தியாவில் இருந்தபடியே பலர் பணி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷியா – உக்ரைன் போரால் தகவல் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ரஷியா மற்றும் உக்ரைனில் நிலவும் போர் பதட்டத்தால் அங்குள்ள பல ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம் பெயரவும் திட்டமிட்டுள்ளன.
இதேபோன்று தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் ஐ.டி. நிறுவனங்கள் வலுவாக காலுன்றவும் முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.
இதையும் படியுங்கள்… ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வார்னர் மீடியா