சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு மெரில்போன் கிரிக்கெட் கிளப் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை, கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளை உருவாகும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் துணை குழு ஒன்று கூடி 2022ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய விதிமுறையின் படி, இனி மன்கட்டிங் முறையில் எதிரணி வீரரை ஆட்டமிழக்க செய்வது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை இந்திய வீரர் அஸ்வின் மன்கட்டிங் முறையில் ஆட்டமிழக்க செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழிமுறை வீதிகளுக்கு உட்டப்பட்ட ஆட்டமிழப்பு முறையாகவே கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மன்கட்டிங் என்பது பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்பு ‘நான் ஸ்டிரைக்கர்’ இருக்கும் பேட்ஸ்மேன் தனது எல்லை கோட்டைத் தாண்டினால் பந்துவீச்சாளர் அந்த பந்தை வீசாமல் அவரை அருகில் உள்ள ஸ்டம்ப்களில் ரன்-அவுட் செய்யும் முறையாகும்.
இந்த ஆட்டமிழக்கும் முறையை முதல் முறையாக கையாண்டவர் இந்திய வீரர் வினு மன்கட்
என்பதால் இதற்கு அவர் பெயரே சூட்டப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.
இதைப்போல, வீரர் பந்தை வழுவழுப்பாக இனி உமிழ்நீரை பயன்டுத்த கூடாது, ஆடுகளத்தில் ஃபில்டிங் நிற்கும் வீரர்கள் தேவையின்றி இடமாறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும். பௌலிங் செய்யப்பட்ட பந்தானது வீரர்கள், மைதானத்திற்குள் நுழையும் விலங்குகள் மற்றும் கமெரா ஆகிய எவற்றின் மீதுபட்டு தடுக்கப்பட்டாலும் அந்த பந்து நோ-பாலாக கருதப்படும் என்ற புதிய விதிமுறைகளுக்கு மெரில்போன் கிரிக்கெட் கிளப்(mcc) அனுமதி வழங்கியுள்ளது.