அமெரிக்காவின் முன்னணி ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் 3 மாதங்களுக்கு முன்பு 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட விஷால் கார்க் பெட்டர்.காம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தார்.
இதன் வாயிலாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்களில் சுமார் 3000 பேரை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க்.
அடுத்த ஜூம் கால்..! 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் Better.com சிஇஓ விஷால் கார்க்..!
3000 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்திய-அமெரிக்கரான விஷால் கர்க் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் டிஜிட்டல் வீட்டு அடமானம் மற்றும் ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com புதன்கிழமையன்று அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சுமார் 3000 ஊழியர்களுக்கு severance Pay உடன் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Better.com அறிவிப்பு
Better.com முதலில் 4000 ஊழியர்களை மார்ச் 8ஆம் தேதி பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்தத் தகவல் லீக்கான நிலையில் மார்ச் 9ஆம் தேதி அறிவித்துள்ளது. இதேபோல் 3000 ஊழியர்களுக்கு severance Pay காசோலை ஒரு வாரத்திற்குப் பின் அளிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் payroll app-ல் முன்கூட்டியே கிரெடிடாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் அச்சம்
Better.com இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சுமார் 8000 ஊழியர்களை வைத்துள்ளது. தற்போது 3000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நிறுவனத்தில் உள்ள 5000 ஊழியர்கள் மிகவும் பயத்துடனும், பதற்றத்துடனும் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் Better.com இந்தியாவில் ஊழியர்களை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.
ரியல் எஸ்டேட்
அமெரிக்காவில் வட்டி விகிதம் மற்றும் ரீபைனான்சிங் மார்கெட் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள காரணத்தால் இப்பிரிவு வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த சில மாதத்திலேயே 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
80 நாள் சம்பளம்
மேலும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட 3000 ஊழியர்களுக்குச் சுமார் 60 முதல் 80 நாள் சம்பளத்தை Better.com நிறுவனம் severance Pay-வாகக் கொடுத்துள்ளது. டிசம்பர் 2021ல் 900 ஊழியர்கள் பணநீக்கம் செய்யப்பட்ட பின்பு இந்நிறுவனத்தில் 9100 ஊழியர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian-American Vishal Garg’s Better.com layoff 3000 employees in US, India
Indian-American Vishal Garg’s Better.com layoff 3000 employees in US, India 3000 ஊழியர்கள் பணிநீக்கம்.. சொன்னதைச் செய்த Better.com விஷால் கார்க்..!