வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
5 மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை
மொத்தம் 690 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது
வாக்கு எண்ணிக்கை – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
3 அடுக்குப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு பிப்.20ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவு
மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை
உத்தரப் பிரதேசத்தில் வெற்றி யாருக்கு?
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள சட்டசபைத் தொகுதிகள்- 403
உ.பி.யில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்- 202
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக களம் இறங்கியுள்ளது
பாரதிய ஜனதா கட்சி 370 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது
பா.ஜ.க. கூட்டணியில் நிஷாத் கட்சி 16 இடங்களிலும், அப்னா தள் 17 இடங்களிலும் களம்கண்டது
சமாஜ்வாதிக் கட்சி கூட்டணியில் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி 343 இடங்களில் போட்டியிட்டது
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கியது
காங்கிரஸ் கட்சி சார்பில் 401 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கினர்
ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டி
பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது
பஞ்சாப் சட்டசபையில் மொத்த இடங்கள்- 117
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்- 59
பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்.20ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது
ஆம் ஆத்மி கட்சி 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது
முதலமைச்சர் சரன்ஜித்சிங் தலைமையில் காங்கிரஸ் களம் கண்டது
சிரோன் மணி அகாலிதளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது
பா.ஜ.க.வுடன் அம்ரிந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணி
70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது
பிப்.14 ஆம் தேதி நடந்த தேர்தலில் 65.37 சதவீத வாக்குப்பதிவு
பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீண்டும் களம் இறங்கியுள்ளார்
உத்தரகாண்டில் 36 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும்
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்.14ல் வாக்குப்பதிவு நடைபெற்றது
கோவா சட்டசபைத் தேர்தலில் 79.61 சதவீத வாக்குகள் பதிவாகின
கோவா தேர்தலில் பா.ஜ.க. 40 தொகுதிகளில் போட்டியிட்டது
காங்கிரஸ் 37 தொகுதிகளில் போட்டியிட்டது- கூட்டணிக் கட்சி 3 இடங்களில் வேட்பாளரை நிறுத்தியது
13 இடங்களில் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்த கட்சி தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும்?
21 இடங்களைப் பிடிக்கும் கட்சி கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றும்
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது
31 இடங்களை வெல்லும் கட்சி மணிப்பூரில் ஆட்சியைக் கைப்பற்றும்
இரண்டு கட்டத் தேர்தலில் சுமார் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
பாரதிய ஜனதா கட்சி 60 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது
மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி
முதலமைச்சர் பிரேன்சிங் ஹெயின்காங் தொகுதியில் போட்டியிட்டார்