உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன.
,
இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மீதமுள்ள மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.
மேலும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் படு மோசமான தோல்வியை எட்டியுள்ளது. கோவா மற்றும் உத்தரகண்டில் குறைவான இடங்களை தான் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கட்சியினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை ரந்தீப் சுர்ஜேவாலா சந்தித்தபொழுது, “காங்கிரஸின் எதிர்ப்பார்ப்பை மீறி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. மக்களுடைய ஆசியை பெற தவறி விட்டோம் என்பதை ஏற்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய சோனியா காந்தி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட முடிவெடுத்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.