உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கையின் போது உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் பாஜக 266 இடங்களை கைப்பற்றியது. சமாஜ்வாடி 125 இடங்களில் முன்னிலை பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தொடர்ந்து, 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் தனிப்பெரும்பான்மை பலம் பெற 36 இடங்கள் தேவை. பாஜக அதைவிட கூடுதலாக 8 இடங்களைப் பிடித்தது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றின. இதனால் கோவாவில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியானது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரிலும் பாஜக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம், 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
2023-ம் ஆண்டில் நடைப்பெறவுள்ள சட்டசபை தேர்தலில் 5 மாநில தேர்தல் முடிவுகளின் சாதகமான தாக்கம் இருக்கும். 4 மாநில தேர்தல் வெற்றி பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும். வீரியத்துடன் செயல்படும்.
நாடு முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்பில் உள்ள ஒரே தலைவர் மோடிதான் என்பதை முடிவுகள் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. உ.பி வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்த பா.ஜ.க?