5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்… முன்னணி நிலவரம்!
பஞ்சாப் தேர்தல்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 77 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்து. தற்போது நடைபெற்றுவரும் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து, மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்திருந்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது. ஆம் ஆத்மி தனித்துத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தலைச் சந்தித்துள்ளது. மேலும், இடதுசாரிகளும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பலமுனை போட்டி நிலவுவதால் இம்முறை பஞ்சாப் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள்:
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்த முடிவு விவரங்கள் இன்றே அறிவிக்கப்படும். தேர்தலில் முன்னணியில் இருக்கும் கட்சிகளின் விவரங்களைப் பின்வருமாறு காணலாம்…