4 மாநிலங்களில் ஆட்சி அமைக்க உள்ள பாஜகவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் @BJP4India கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 10, 2022
மேலும், 4 மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.