EPFO News: ஆவணங்கள் தேவையில்லை; ஃபேமிலிக்கு கிடைக்கிற ரூ7 லட்சத்தை மிஸ் பண்ணாதீங்க! –

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இ நாமினேஷனை தாக்கல் செய்வது அவசியமாகும்.

இபிஎஃப் இ நாமினேஷன்

பிஎஃப் மற்றும் பென்சன் தொடர்பாக ஆன்லைன் பரிவர்த்தனைக்கு இ நாமினேஷன் அவசியமாகும். இதுதவிர, பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 7 லட்சம் வரையிலான காப்பீட்டையும் உறுதி செய்கிறது.

மேலும், தேவைப்படும் சமயத்தில் நாமினி விவரங்களை மாற்றுக்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது.
இதனை செய்திட சுய அறிவிப்பு மட்டுமே போதுமானது. எவ்வித ஆவணங்களோ அனுமதிகளோ தேவையில்லை.

ஆன்லைனில் இ நாமினேஷன் செய்வது எப்படி?

  • முதலில் epfoவின் https://www.epfindia.gov.in/site_en/index.php என்கிற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் Service செக்ஷனில் For Employees கிளிக் செய்ய வேண்டும். கணினியில் புதிய திரை தோன்றும்.
  • அதில், ‘Member UAN/Online Service’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, UAN நம்பர் மற்றும் Password பதிவிட்டு லாகின் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, ‘Manage Tab’ கீழ் ‘e-Nomination’ செலக்ட் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, “Provide Details’ tab திரையில் தோன்றும், நீங்கள் saVE கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், YESஐ தேர்வு செய்து, குடும்ப விவரத்தை அப்டேட் செய்ய வேண்டும்.
  • அங்கிருக்கும், Add family details’கிளிக் செய்து, கூடுதலாக மற்றொரு நாமினியை சேர்த்துக்கொள்ளலாம்.
  • பின்னர், Nomination Details’ இல் நீங்கள் கொடுக்க விரும்பும் ஷெரை தேர்வுசெய்து, Save EPF Nomination கொடுக்க வேண்டும்.
  • இறுதியாக, E-Sign கிளிக் செய்தால், ஓடிபி நம்பர் வரும். அதனை சப்மிட் செய்தால் போது, நாமினேஷன் EPFoஇல் ரெஜிஸ்டர் ஆகிவிடும்.

குறிப்பு: ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு உறுப்பினர்களிடம் ஒருபோதும் EPFO கேட்காது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.