Nokia
தரப்பில் இருந்து இனி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியாகாது என
HMD Global
நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ஆடம் ஃபெர்குசன்
Android
Authority-க்கு அளித்த பேட்டியில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதில், Nokia தரப்பிலிருந்து பிரீமியம்
ஆண்ட்ராய்டு
ஸ்மார்ட்போன்களை வெளியிடும் எண்ணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனத்திற்கு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மீதான ஈடுபாடு குறைவு என்று குறிப்பிட்ட அவர், ரூ.50,000க்கும் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் பெரிதாகச் சென்றடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பட்ஜெட் போன்களுக்கு பெயர்போன தங்கள்
நோக்கியா
பிராண்டு, புதிய குறைந்த விலை 5ஜி போன்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் டெக் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.
MWC 2022 நிகழ்வில் நோக்கியா
சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2022) நிகழ்வில் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் தங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை காட்சிப்படுத்தின. Samsung, ரியல்மி, ஒன்பிளஸ் போன்ற கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முன்னிலை வகித்தன.
ரஷ்யாவை கைவிடும் டெக் நிறுவனங்கள்? நெருக்கடியை தாங்குமா அரசு!
ஆனால், நோக்கியா இந்த வரிசையில் இடம்பெறவில்லை. இந்த நிகழ்வை முழுவதுமாக நோக்கியா தவிர்க்கவில்லை. தனது புதிய மூன்று Nokia ஸ்மார்ட்போன்களை MWC 2022 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Nokia C21, Nokia C21 Plus and Nokia C2 2nd Edition ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது, பிராண்டின் குறைந்த விலை நோக்கியா சி சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை குறித்து எந்த தகவலையும் நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிமுக நிகழ்வில், நோக்கியா வயர்லெஸ் ஹெட்போனையும் பயனர் சந்தைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வீணான முயற்சிகள்
உலகளவில் பலருக்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய பெருமை Nokia நிறுவனத்திற்கு உண்டு. ஆனால், சீன நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தனது Symbian இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுவனம் நிறுத்தியது.
தொடர்ந்து பட்டன் போன்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கத் தொடங்கியது. தொடக்கத்தில் நல்ல பெயர் வாங்கிய நிறுவனத்திற்கு, அடுத்தடுத்து வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை.
Android 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்!
குறிப்பாக, நோக்கியா வெளியிட்ட Flagship ஸ்மார்ட்போனான Nokia 9 PureView, பல்வேறு பிரீமியம் அம்சங்களைக் கொண்டதாக இருந்தது. சூப்பர் கேமரா, கிளீன் இயங்குதளம் என அனைத்து விதமான அம்சங்களை நோக்கியா கொடுத்தும், இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் தோல்வியைத் தழுவியது.
இது தான், நிறுவனம் பிளாக்ஷிப் தயாரிப்பு முயற்சிகளைக் கைவிடுவதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. பெருவாரியான மக்களைச் சென்றடையும் தயாரிப்புகளில் கவனம் செலுத்த, நோக்கியா திட்டமிட்டு வருகிறது.
Read more:
Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாதுWhatsApp புதிய அப்டேட்: Poll அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டம்!Russia Ukraine War: இன்டர்நெட் கட்; டிக்டாக் குளோஸ்