உக்ரைன் நாட்டின் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்ட 700 மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.
சுமியில் தண்ணீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று மீட்டு அண்டை நாட்டின் எல்லைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்திய விமானங்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த நடிகர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து நடிகர் பாஷா லீ ஆயுதம் ஏந்தி போராடினார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அவர் ரஷ்ய வீரர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
குண்டு வெடிக்காத இடமே இல்லை: முன்னாள் உக்ரைன் அழகி
ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் சைரன்களும், குண்டுகளும் வெடிக்காத இடமே இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் அழகி உருக்கமாக தெரிவித்தார்.
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கவும்: உக்ரைன் அதிபர்
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அதிகரியுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் காணொளி முறையில் அவர் பேசினார்.
வெளிநாட்டு தலைவர் ஒருவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
உக்ரைனுக்கு சீனா உதவி
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. உக்ரைனின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை சீனா எடுத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் சீனா நடுநிலை வகிக்கிறது. அதேநேரம், அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்குமாறு சீனா வலியுறுத்தி வருகிறது.