நடிகர்
சூர்யா
நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியான படம்
எதற்கும் துணிந்தவன்
.
பாண்டிராஜ்
இயக்கிய இப்படம் நேற்று வெளியானது. என்னதான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் சென்னையில் இதுவரை சூர்யா படங்களுக்கு நிகரான முதல் நாள் வசூலை எதற்கும் துணிந்தவன் படம் பெறவில்லை. இதற்கு காரணம் புரியாமல் சூர்யா ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால் இந்த வசூல் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என நம்புகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான விவரம்..!
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட கட்சி இப்படத்தை எதிர்த்து அறிக்கை விட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு கட்சி இப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இமான்
இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருகன் பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்பாடல் தமிழ் கடவுள் முருகனை இழிவுப்படுத்துவதாக இருப்பதாகவும், எனவே இப்பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் எனவும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் அக்கட்சியின் நிறுவனர் பேசுகையில், இப்படம் நேற்று வெளியான பிறகு தான் இந்த பாடலை நாங்கள் கேட்டோம்.இதில் தமிழ் கடவுள் முருகனை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.எனவே பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும்.
மேலும் இப்படாலில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான் மற்றும் இப்பாடலை இயற்றிய யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து நீதிமன்றத்தில் அலைக்கு தொடரவும் உள்ளோம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?