பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி ஆபாரமாக வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 18 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது.
பஞ்சாப் மாநில முதல்வரான சரண்ஜித் சன்னி, பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சன்னி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார்.
இதற்கிடையே, சன்னி தலைமையிலான அமைச்சரவை சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மி தலைமையிலான புதிய சட்டசபை அமைக்க வழி வகுக்க பரிந்துரைத்தது.
இந்நிலையில், சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரிடம் வழங்கினார்.
இதையும் படியுங்கள்..
ரசாயன ஆயுத தாக்குதலா?: ரஷிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் மறுப்பு