புதுடெல்லி:
கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து நாள் தோறும் மீள்பவர்கள் எண்க்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6,208 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
தினசரி பாதிப்பு விகிதம் 0.52 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.55 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 84 ஆயிரத்து 261 ஆக உயர்ந்தது.
அதேநேரம் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோரின் சதவீதம் 98.70 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,219 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன் தினத்தை விட 2,269 குறைவு ஆகும்.
கொரோனா பாதிப்பால் மேலும் 255 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 227 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,15,714 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 179.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று போடப்பட்ட 16,73,515 டோஸ்கள் அடங்கும்.