மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது.
அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், பிள்ளைகளுக்கு தேயைான உணவு வகைகள் இல்லாமல் போகும் என எச்சரித்துள்ளார்.
அரசாங்க வங்கிகளில் டொலர் ஒன்றுக்கு 230 ரூபா வழங்கப்படுகின்ற போதும் வெளியில் டொலர் ஒன்று 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,