உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் வெளியேறி உள்ளனர்.
சுமி பகுதியில் இருந்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் 54 பேருந்துகள் மற்றும் 2 ஆயிரத்து 664 தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஸியம் பகுதியிலிருந்து ஆயிரத்து 200 பேரும், புச்சா மற்றும் இர்பின் பகுதியில் இருந்து 2 ஆயிரம் பேரும் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
முக்கிய நகரமான மரியுபோலில் இருந்து யாரும் வெளியேறவில்லை என உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்தப்படுவதால் பொதுமக்கள் வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.