உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் கிழக்கு போலந்தில் உள்ள எல்லை முகாமிற்கு பேருந்தில் செல்வதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
போலந்து-உக்ரைன் எல்லையில் அகதிகளாக வருபவர்களுக்காக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் அகதிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. உக்ரைனில் இருந்து இதுவரை 23லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.