உக்ரைன் படைகளுக்கு எதிராக விருப்பமுள்ள தன்னார்வலர்களை போரிட அனுமதிக்க விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது டொனெட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் உள்ள கிளர்ச்சிப்படைகளுக்கு உக்ரைன் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு Javelin மற்றும் Stinger மிசைல் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கையை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷொய்கு முன்வைத்தார்.
ஷொய்குவின் அந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிபர் புதின் கூறினார். அப்போது, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சுமார் 16 ஆயிரம் பேர் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக உக்ரைன் படைகளுடன் போரிட தயாராக இருப்பதாக ஷொய்கு தெரிவித்தார்.