புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 2, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) ஒரு தொகுதியும் பெற்றிருந்தன. இந்த மூன்றில் மட்டும் வென்று அக்கட்சியின் மானம் காத்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகள் 403. இவற்றில் பாஜகவிற்கு 273 இல் வெற்றி கிடைத்து அக்கட்சி தன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
முக்கிய எதிர்கட்சியான அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதிக்கு 125 கிடைத்திருந்தது. இதை விட மோசமான நிலை இதர எதிர்கட்சிகளான பிஎஸ்பி மற்றும் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது.
உ.பி.யின் பலியா மாவட்டத்தின் ராஸ்ரா தொகுதியில் மட்டும் பிஎஸ்பியின் வேட்பாளர் உமாசங்கர்சிங் வெற்றி பெற்றுள்ளார். இங்கு உமா சங்கர் பெற்றது தொடர்ந்து மூன்றாவது முறையிலான வெற்றி ஆகும்.
எனினும், இந்தமுறை பிஎஸ்பி வேட்பாளரான உமாசங்கர்சிங் சற்று குறைந்த வாக்கு வித்தியாசமாக 6585 பெற்றார். உமாசங்கருக்கு அடுத்த நிலையில் சமாஜ்வாதியின் கூட்டணியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேந்திரா இருந்தார்.
இதற்கு முன் ராஸ்ரா, உ.பி.யின் தனித்தொகுதிகளில் ஒன்றாகி இருந்தது. அப்போதும் ராஸ்ராவில், பிஎஸ்பி பல தேர்தல்களில் வென்று வந்தது. உமாசங்கருக்கு முன்பாக பிஎஸ்பியில் குர்ரா ராம் என்பவர் ராஸ்ராவில் வென்று வந்தார்.
குர்ரா ராமிற்கு பின் ராஸ்ரா 2012 இல் தனித்தொகுதி பட்டியலில் இருந்து நீங்கியது. இதன் பிறகு அங்கு உமாசங்கர்சிங் பிஎஸ்பிக்காகப் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை வென்று வருகிறார்.
காங்கிரஸ் பெற்ற இரண்டு தொகுதியில் ராம்பூர் காஸ் மற்றும் பரேந்தா ஆகியன இடம் பெற்றுள்ளன. ராம்பூர் காஸில் மோனு என்கிற ஆராதனா மிஸ்ரா, 14,741 வாக்குகளில் பாஜகவை தோற்கடித்துள்ளார்.
இவரும் ராம்பூர் காஸில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார் ஆராதனா. அதேபோல், காங்கிரஸுக்கு இங்கு தொடர்ந்து கிடைத்த 12 ஆவது வெற்றி ஆகும்.
ஆராதனாவிற்கு முன்பாக அவரது தந்தையும் மாநிலங்களவை எம்.பியுமான பிரோமத் திவாரி தொடர்ந்து ஒன்பது முறை வென்றிருந்தார். 2017 சட்டப்பேரவை தேர்தலில் வீசிய மோடி அலையிலும் பிரோமத் திவாரியை வீழ்த்த முடியவில்லை.
கடந்த 2014 இல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யான பின் பிரோதத் திவாரியின் தொகுதி அவரது மகள் ஆராதனாவிற்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பாஜக தொடர்ந்து இரண்டாவது இடத்தை பெற்று வருகிறது.
காங்கிரஸின் இரண்டாவது வெற்றி வேட்பாளராக இருப்பவர் வீரேந்தர் சவுத்ரி. இவர், மஹராஜ்கன்ச் மாவட்டத்திலுள்ள பரேந்தா தொகுதியை நீண்ட காலத்திற்கு முன் இழந்த காங்கிரஸ் மீண்டும் மீட்டுள்ளது.
எனினும், இங்கு வீரேந்தர் சவுத்ரிக்கு பாஜகவின் பஜர்ங் பஹதூர்சிங்கை விட வெறும் 1,087 வாக்குகள் மட்டுமே கூடுதலாகக் கிடைத்துள்ளது. கடந்த 1952 முதல் 1967 ஆம் ஆண்டு வரையிலான தேர்தலில் இங்கு காங்கிரஸின் கவுரி ராம் குப்தா வென்றிருந்தார்.
பிறகு, பியாரி தேவி எனும் பெண், சுயேச்சை வேட்பாளராக 1969 தேர்தலில் வென்றிருந்தார். 1974 மற்றும் 1980 தேர்தல்களில் இரண்டு முறை சிபிஐ கட்சியின் ஷியாம்நாராயண் திவாரி வென்றார்.
ஜனதா கட்சியின் ஹர்ஷவர்தன்சிங் என்பவர் 1985 தேர்தலில் வென்றிருந்தார். சிபிஐ கட்சியின் ஷியாம்நாராயண் திவாரி காங்கிரஸில் இணைந்து 1989 மற்றும் 1991 என இரண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
அதன் பின் முக்கிய இடம் வகுக்கத் துவங்கிய பாஜகவின் வேட்பாளராக சவுத்ரி ஷிவேந்திரா 1993 இல் வென்றார். இதில் ஷிவேந்திராவை விட சிபிஐஎம் கட்சியின் வினோத் திவாரி வெறும் 50வாக்குகளில் வென்றிருந்தது.
எனினும் இதன் அடுத்த தேர்தலான 1996 இல் வினோத் திவாரி வெற்றார். இந்தமுறை அவரது சிபிஐஎம், சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்திருந்தது.