இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான முதலீடாக கருதும் வங்கி வைப்பு நிதிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் இத்தகைய அறிவிப்பு வந்தால் நாட்டு மக்களுக்கு கொண்டாட்டம் தான்.
3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகித்தை உயர்த்தியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன்ற வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மார்ச் 10, 2022 முதல் ரூ. 2 கோடிக்கு மேல் வைப்புத் தொகை (எஃப்டி) செய்யப்படும் அனைத்து திட்டத்தின் மீதும் வட்டி விகிதங்களை 20-40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருக்கும் வைப்பு நிதிக்கு வட்டியை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் வைப்பு நிதிக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.
பெரும் பணக்காரர்கள்
இதன் மூலம் பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் செய்ய செய்யப்படும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வைப்பு நிதிக்கு கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும். ஏற்கனவே பல வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது – 3.10 சதவீதத்தில் இருந்து 3.30 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது – 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 3.10 சதவீதத்தில் இருந்து 3.60 சதவீதமாக உயர்வு
மூத்த குடிமக்களுக்கு
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது – 3.60 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக உயர்வு
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது – 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 3.60 சதவீதத்தில் இருந்து 4.10 சதவீதமாக உயர்வு
2 கோடி ரூபாயக்கு கீழ்
இதேபோல் 2 கோடி ரூபாயக்கு கீழ் செய்யப்படும் வைப்பு நிதிக்கு பிப்ரவரி மாதம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.10 சதவீதத்தில் இருந்து 5.20 சதவீதமாக உயர்வு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.30 சதவீதத்தில் இருந்து 5.45 சதவீதமாக உயர்வு
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 5.40 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்வு
இதுவே மூத்தகுடி மக்களுக்கான வைப்பு நிதிக்கு
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 5.60 சதவீதத்தில் இருந்து 5.70
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 5.80 சதவீதத்தில் இருந்து 5.95
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை – 6.20 சதவீதத்தில் இருந்து 6.30
SBI hikes interest rates on 2 crore above Fixed deposits
SBI hikes interest rates on 2 crore above Fixed deposits எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. இனி அனைவருக்கும் கூடுதல் வருமானம்..!