ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் இறப்பர் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக, அசோசியேட் அட்வான்ஸ் இறப்பர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 5.85 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அசோசியேட் அட்வான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.