ஒன்றுபட்டு இருந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்! – வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பாஜகவின் தொடர் வெற்றி… காங்கிரசின் தொடர் தோல்வி… உணர்த்துவது என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
S.A. Jeelan
பாஜக:தேசிய அளவில் வலிமையான கட்டமைப்பை கொண்டு கட்சி நோக்கங்களை கட்சித் தொண்டர்களுடன் இணைத்து இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
காங்கிரஸ்: பல வருடங்களாக மாநிலங்களின் வலிமை மிக்க தலைவர்கள் தொண்டர்களை இழந்து கட்டமைப்பே இல்லாமல் பாஜகவை விமர்சித்து மட்டுமே அரசியல் செய்கிறது
வெற்றிச்செல்வன்துரை
ஒரு கட்சியை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. மக்களை ஒரு கட்சி இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
PVS.Prabhakaran
இந்த இரண்டு மத்திய கட்சியே அழித்துவிட்டு மக்கள் ஒரு பெரிய கட்சி ஏதோ உருவாக்கி கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்…
Saravana Kumar
இனி காங்கிரஸிற்க்கு மரண அடி விழா தான் செய்யும்…காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சி கூட்டணி தான் பாஜகவை வீழ்த்த ஒரே வழி… மம்தா(மே.வ), கெஜ்ரிவால்(டில்லி, பஞ்சாப்,கோவா) , தேஜஸ்வி(பீகார்), கம்யூனிஸ்டுகள், சரத் பவார், சிவசேனா(மகாராஷ்டிரா), ஒமர்(ஜம்மு),ஜெகன் (ஆ.பி), சந்திரசேகராவ்(தெலுங்கானா),தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பாகுபாடின்றி ஒன்றுபட்டு இருந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும். அணி அமையவில்லை என்றால் இனி இருபது ஆண்டுகளுக்கு பாஜக தான்
image
சைலஸ் சி
வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுகிறது பாஜக…
வெறும் ஒரேயொரு குடும்பத்தை மட்டுமே நம்பி களத்தில் உள்ளது காங்கிரஸின் தோல்விக்கு காரணமாக அமைகிறது..
Karthick Raja
காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை மற்றும் பிரதமர் வேட்பாளராக 2024 வேறு ஒருவரை அறிவிக்கலாம் .
2024 தேர்தலை மனதில் வைத்து காங்கிரசை, தொண்டர் பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற வேண்டும்.
புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி குடும்ப அரசியலை ஒழித்தால் காங்கிரஸ் மீண்டும் எழும்.
cdrsekar
3 காரணம்.
அனைவரும் தலைவர்களாக இருப்பது.
தொண்டர்கள் இருந்தா தானே ஓட்டு கேட்க போவது.
பாஜக இவிஎம் வைத்து தெளிவாக விளையாடுகிறது. அதிலும் அனைத்து தொகுதிகளில் அது செட் செய்வதில்லை. தனக்கு பலவீனமான தொகுதியில் செட்டிங். தென் இந்தியாவில் நடந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.