கொல்கத்தா: காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இனைந்து 2024 தேர்தலில் போட்டியிடலாம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளைக் கண்டு சோர்வடைய வேண்டாம்; நேர்மறையாக சிந்தியுங்கள் என அவர் கூறியுள்ளார்.
