புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், தனியார் ஊடகத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பானது எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். மேலும் நாட்டில் நிலவும் அரசியல் சூழ் நிலைகளை கருத்தில் கொண்டால் காங்கிரஸ் ஒரு பிராந்திய கட்சியாக சுருங்கி விடும். தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் இறுதிக் காலத்தை குறிக்கிறது.
தேர்தல் முடிவுகளில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. இனி காந்திகளின் (சோனியா, ராகுல், பிரியங்கா) தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. அவர்கள் ஒரு வலிமையான சக்தியாக இனி இருக்கப் போவ தில்லை. ஆனால் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். தண்ணீர் அதன் நீர்மட்டத்தை அடைவதை போல மக்கள் தங்கள் தலைவர்களை கண்டுபிடிப்பார்கள். இவ்வாறு அஸ்வனி குமார் கூறினார்.