நடிகர்
சூர்யா
நடிப்பில் சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம்
எதற்கும் துணிந்தவன்
.
நேற்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கண்ணபிரான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வினய் இப்படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். எதற்கும் துணிந்தவன் படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர்
கார்த்தி
டிவிட்டியுள்ளார்.
காளிகாம்பாள் கோவிலில் காதலருடன் வழிபாடு செய்த நயன்தாரா.. கூட இன்னொருத்தர் யாருன்னு பாருங்க!
அவர் பதிவிட்டிருப்பதாவது, எதற்கும் துணிந்தவன், இதுபோன்ற எரியும் சிக்கலைக் கையாண்டதற்கும், தடைசெய்யப்பட்ட தலைப்பில் உரையாடலைத் தொடங்கியதற்கும் பாராட்டுகள். அண்ணா படத்தை இளனுடன் பிடித்து இயக்குனருக்கு பலம் கொடுக்கிறார். குடும்பத்தினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!!
என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பாலா ஒரு சேடிஸ்ட்… அழான நடிகைகளை பிடிக்காது.. அள்ளிவிட்ட பிரபல நடிகர்!
கார்த்தியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அண்ணனின் படத்திற்கு நன்றாக விளம்பரம் கொடுக்கிறீர்கள் என்று கிண்டலடித்துள்ளனர். அதேநேரத்தில் பலரும் படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியும் உள்ளனர்.