கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள் மலைப்பகுதி உள்ளது இந்த வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. அதிகாலை முதல் பரவி வரும் தீயானது மயிலாடும் பாறை, மயில் தோகை வரை, குருசடி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்து வருகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுதீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த காட்டு தீயால் அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சியினங்கள், ஊர்வன என பலவும் அழியும் அபாயம் ஏற்படுள்ளது.
ஆண்டு தோறும் இதே போல காட்டுத்தீ ஏற்படுவதாகவும் அதனை உலங்கூர்தி ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்