ரியாத்:
சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிறிய அளவில் தீப்பிடித்து இருந்தது. இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் கூறும் போது, “டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா விமான நிலையத்தில் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.