பெங்களூரு: சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
