சென்னை,
சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி (25 வயதுக்கு உட்பட்டோர்) வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக லோகேஷ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வருமாறு:-
லோகேஷ்வர் (கேப்டன்), ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் (துணை கேப்டன்), கணேஷ் (விக்கெட் கீப்பர்), கவுரி சங்கர், அரவிந்த், பூபதி வைஷ்ணகுமார், விமல்குமார், சுபாங் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன், சோனு யாதவ், ராகுல், நிகிலேஷ் திரிலோக் நாக், அஜித் ராம், மோகன் பிரசாத், மனவ் பிராக், ஹரிஷ், முகிலேஷ், மொகித் ஹரிஹரன், சச்சின்.