பீஜிங்: சீனாவில் புதிய வைரஸ் பரவல் காரணமாக சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவியது. இந்த வைரஸ் பரவல் தற்போதுதான் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.
புதிய வைரஸ் தீவிர பரவல் காரணமாக அதை கட்டுப்படுத்தும் வகையில், மத்தியில் வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் 9 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு சீனா லாக்டவுனை அறிவித்து உள்ளது.
அதன்படி, அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்பட்டு போக்குவரத்து இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் மூன்று சுற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் புதிய வைரஸ் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.