ஏற்கனவே ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென நம் நாட்டின் மீது போர் விமானங்கள் பறந்தால் நமக்கு எப்படி இருக்கும்?
அதேபோலத்தான் நேற்று சுவிஸ் மாகாணம் ஒன்றின் மக்கள் திடுக்கிட்டுள்ளார்கள்.
ஆம், நேற்று மதியம் திடீரென ஜெனீவா வான் வெளியில் போர் விமானங்கள் இரண்டு வேகமாகப் பறந்து சென்றுள்ளன.
குழப்பமடைந்த மக்கள் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே, தேடும் விளக்குகளை (searchlights) எரியவிட்டபடி இரண்டு ஹெலிகொப்டர்கள் பறந்துள்ளன.
அடுத்து, இராணுவ டாங்க் ஒன்றின் பின்னால் வரிசையாக பொலிஸ் கார்கள் வேகமாக விரைய, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அதிக ஆபத்தான குற்றவாளி ஒருவரை, ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பாகமாகத்தான் இவையெல்லாம் நடந்துள்ளனவாம்.
பொலிசார் இந்த தகவலைத் தெரிவித்த பின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சு விட்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த அதிக அபாயமுள்ள குற்றவாளி யார் என்பதைத் தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டார்கள்!