நடிகர்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது
எதற்கும் துணிந்தவன்
படம் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ்
இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான
சூரரை போற்று
மற்றும்
ஜெய் பீம்
ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளிவந்த சூர்யாவின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இவ்விரு படங்களும் சூர்யாவிற்கு சரியான சமயத்தில் கைகொடுத்துள்ளது.
அதைமட்டும் இனி செய்யவே மாட்டேன் : யாஷிகா
இருப்பினும் இப்படங்கள் OTT யில் வெளியானதால் மூன்று வருடம் கழித்து சூர்யாவின் படம் திரையில் வெளியாகவுள்ளது. சமீபத்திய படங்களின் வெற்றி, நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியீடு என இவ்விரு காரணங்களும் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சூர்யா
தற்போது இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, நேருக்கு நேர் படத்தில் நடிக்கும்போது மற்ற ஒரு நடிகருக்கு கிடைக்கும் ஆதரவு எனக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பினேன் என கூறினார்.
விஜய்
நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் விஜய்தான் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் மற்றொரு நடிகர் என கூறியது
விஜய்
ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யாவிற்கு அப்படி விஜய்யின் மேல் என்ன கோபம் எனவும் ரசிகர்கள் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?