உத்தரப் பிரதேதம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டும் சும்மா பேருக்கு வெற்றி பெற்றுள்ளது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சொல்லிக் கொள்ளும்படியாக இருந்த பஞ்சாப் மாநில ஆட்சியையும் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் பறிகொடுத்துவிட்டது. இதனால் அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்
மம்தா பானர்ஜி
சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடையாமல் நேரம்மறையாக சிந்திக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு அவர் நம்பிக்கையூட்டி உள்ளார்.
அத்துடன், யாரது மம்தாவா பேசுவது என்பது போல, காங்கிரஸ் விரும்பினால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் தயார் என்றும் அழைப்புவிடுத்து சோனியா, ராகுலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகளே 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பது சரியல்ல என்று பாஜகவுக்கும், மோடிக்கும் குட்டு வைத்துள்ளார் மம்தா.