உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உலக நாடுகள்பல ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன. அதன்படி, பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவையும் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைனுக்கு புதுவிதமாக உதவும் பிரபல வெப்சைட்!
இந்நிலையில், யுனிவர்சல் மியூசிக் குழுமத்தைத் தொடர்ந்து பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனமும் ரஷ்யாவில் தங்களுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள சோனி நிறுவனம், உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்களது உலகளாவிய மனிதாபிமான நிவாரண முயற்சியைத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளது. மேலும், சேவை நிறுத்தி வைக்கப்படும் காலங்களில் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை