
ஜெயராம் – மீரா ஜாஸ்மின் படத்திற்கு டைட்டில் கிடைத்த சுவாரஸ்யம்
பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு. குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர். தற்போது ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் கதாநாயகியாக மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ள மீரா ஜாஸ்மின், இதில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு மகள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதைக்கு ஏற்ற டைட்டில் தான் இது என்றாலும் இயக்குனர் சத்யன் அந்திக்காடுக்கு இந்த டைட்டில் பளிச்சிட்டது ஷூட்டிங் ஸ்பாட்டில் தான். படப்பிடிப்பின்போது ஒருநாள் ஜெயராமின் மகன் மாளவிகா தந்தையைப் பார்க்க வந்துள்ளார். ஜெயராம் அவரை அழைத்து ஒவ்வொருவரிடமும் அறிமுகப்படுத்தி இவர் என் மகள், என் மகள் இன்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டிருப்பதை சத்யன் அந்திக்காடு கவனித்துள்ளார்.. அப்போதே தனது படத்திற்கு மகள் என டைட்டில் வைக்க வேண்டும் என தீர்மானித்து படக்குழுவினரிடமும் கூறிவிட்டாராம் சத்யன் அந்திக்காடு.