டி23 ஆட்கொல்லி புலியை பிடிக்க 11 லட்ச ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய டி23 என்ற புலி நான்கு பேரை கொன்றது. இந்த டி23 ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆட்கொல்லி புலியை பிடிக்க கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கிய பணி அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடித்தது. இறுதியாக 15ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் புலியை பிடித்தனர். புலி, தற்போது கர்நாடகா மாநிலம் மைசூரு மிருக காட்சி சாலையில் உள்ள, புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பாரமரிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறியும் உரிமை சடத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவர் இந்த புலியை பிடிக்க செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் கேட்டிருந்தார். அந்த தகவலில் புலியை பிடிக்க மற்றும் பராமரிப்பதற்கு என்று மொத்தமாக ரூ. 11லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்படடதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.