தங்கம் விலை மீண்டும் சரிவு.. இனியும் குறையுமா.. இது வாங்க சரியான இடமா.. கணிப்பு என்ன?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலையானது கடந்த அமர்வில் காலை நேரத்தில் சரிவினைக் கண்டு இருந்த நிலையில், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது.

ஆக அதனை போலவே இன்றும் இருக்குமா? விலை குறையும்பட்சத்தில் வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்.கணிப்புகள் என்ன சொல்கின்றன.

பரபர தேர்தல் முடிவுகள்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் கவனம்!

தற்போது வாங்காலாமா?

தற்போது வாங்காலாமா?

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே நிபுணர்களும் கணித்து வருகின்றனர். எனினும் கடந்த இரண்டு- மூன்று அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ள நிலையில், இது இன்னும், எவ்வளவு சரியலாம். தற்போதே வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் முதலீட்டாளார்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கலாமோ?

மீண்டும் அதிகரிக்கலாமோ?

உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, பேச்சு வார்த்தையில் சுமூக தீர்ப்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கையில், மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியது.எனினும் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தைக்கு மத்தியில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

40 வருட உச்சத்தில் பணவீக்கம்
 

40 வருட உச்சத்தில் பணவீக்கம்

உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற நிலை இருந்து வருகின்றது. இது சப்ளை சங்கியில் பாதிப்பு ஏற்படலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தினையும் முறித்துக் கொள்வதாக கூறியுள்ளன. ஒரு புறம் சவுதி இதற்கு ஆதரவாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டாலும், தேவை அதிகரித்து வரும் இந்த சூழலில் இது மேற்கொண்டு பிரச்சனையாய் அமையலாம். இதற்கிடையில் தான் அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.

ஆறுதல் தரும் பத்திர சந்தை

ஆறுதல் தரும் பத்திர சந்தை

இப்படி பல்வேறு நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் பத்திர சந்தையானது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளன. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக வரவிருக்கும் நாட்களில் இது தொடரும் பட்சத்தில் இது அதிகளவிலான தங்கம் விலையேற்றத்தினை தடுக்கலாம்.

கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம்

கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வரும் நிலையில், இது நிச்சயம் அமெரிக்கா மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். குறிப்பாக வரவிருக்கும் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அப்படி அதிகரிக்கப்பட்டால் அது வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் டாலரின் மதிப்பு வலுவடையலாம். இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம்.

தொடரும் பதற்றம்

தொடரும் பதற்றம்

பல்வேறு சர்வதேச காரணிகளும் தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை கொடுத்தாலும், உக்ரைன் ரஷ்யா பதற்றமானது மேற்கொண்டு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது தற்போதைக்கு குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம். அதோடு தொடர்ந்து சமீபத்திய வாரங்களாகவே உச்சம் தொட்டு வந்த நிலையில் ஷார்ட் கவரிங்கும் செய்யலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்றே குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2600-க்கு மேல் சரிவு

ரூ.2600-க்கு மேல் சரிவு

இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு கடந்த செவ்வாய்கிழமையன்று 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. இதே இன்று 52,874 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 2,600 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பு தான் என்றாலும், இன்னும் குறையும்பட்சத்தில் வாங்கினால் இன்னும் லாபகரமானதாக இருக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 12.60 டாலர்கள் குறைந்து, 1987.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% குறைந்து, 26.020 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 408 ரூபாய் குறைந்து, 52,817 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 571 ரூபாய் குறைந்து, 69,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 4906 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 39,248 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 5352 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 42,816 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.50 பைசா அதிகரித்து, 74.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 746 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 74,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் இன்னும் லாபம் கூடுதலாக கிடைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 11th 2022: gold prices today fall further,right time to invest?

gold price on march 11th 2022: gold prices today fall further,right time to invest?/தங்கம் விலை மீண்டும் சரிவு.. இனியும் குறையுமா.. இது வாங்க சரியான இடமா.. கணிப்பு என்ன?

Story first published: Friday, March 11, 2022, 11:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.