வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 13-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 14,15-ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.