புதுடெல்லி: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் போட்டியிட்ட சங்ரூர் தொகுதியில் தொண்டர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறிய தாவது: பாஜகவுக்கு எதிராக மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி யாக ஆம் ஆத்மி உள்ளது. பஞ்சாப் தேர்தலில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு ஆம் ஆத்மியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். வரும் காலங்களில் தேசிய அளவில் இயல்பான முறையில் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுக்கும். பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பத்தால் பஞ்சாபை தூய்மைப்படுத்தி உள்ளனர். பஞ்சாபின் முக்கிய கட்சிகளான சிரோமணி அகாலிதளம், காங்கிரஸ் ஆகியவற்றின் சகாப்தம் முடிந்துவிட்டது. பஞ்சா பில் ஆம் ஆத்மி நேர்மையான ஆட்சியைக் கொடுக்கும்.
ஆம் ஆத்மி தலை வரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலை தீவிரவாதி என்று கூறி எதிர்மறையான பிரச்சாரம் செய்தனர். ஆனால், கேஜ்ரிவால் நேர்மறையாக பிரச் சாரம் செய்தார். பஞ்சாபின் வளர்ச்சிக்கு நேர்மையான அரசை ஆம் ஆத்மி தரும். இவ்வாறு ராகவ் சத்தா கூறினார்.
– பிடிஐ