சிங்கப்பூர் : தமிழர்கள் பக்தியுடன் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவை, ‘யுனெஸ்கோ’வின் பாரம்பரிய கலாசாரங்கள் பட்டியலில் சேர்க்க, சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது.
10 சிறப்பு நிகழ்வு
ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற, தமிழர்களின் தைப்பூச திருவிழா உள்ளிட்ட 10 சிறப்பு நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினத்தன்று அசுரனை அழிக்க அன்னை பார்வதியிடம் முருகன் வீர வேல் வாங்கிச் சென்றதாக கந்த புராணம் கூறுகிறது.
இந்நாளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். வேண்டுதல்அன்றைய தினம் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஏராளமானோர் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவர். பக்தர்கள் பலவித காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.தைப்பூசத்திற்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார அங்கீகாரம் கிடைக்கும்பட்சத்தில், அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்து, ஏராளமான சுற்றுலா பயணியரை வரவழைக்கும்.
சிங்கப்பூர் அரசு தைப்பூச திருவிழாவுடன், சீன புத்தாண்டை முன்னிட்டு நடக்கும் ‘சின்கய் அணிவகுப்பு’, மலேய வம்சாவளியினரின், ‘டிகிர் பரத்’ என்ற இசை நாடகம், பாரம்பரிய மருத்துவ சிகிச்சை உட்பட, 10 அம்சங்களை யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்காக தேர்வு செய்துள்ளது.
Advertisement