நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே முந்தைய வழங்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமின்படி, திருச்சியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று., சென்னை ராயபுரத்தில், கள்ள ஓட்டுப் போட முயன்றதாக,  திமுக நபர் நரேஷ் என்பதை பிடித்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில்,அவரது  சட்டையை கழற்றி, சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயகுமார் நள்ளிரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.

இதையடுத்து அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக, மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவரது மகள், மருமகன் ஆகியோர் மீதும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியைச் சேர்ந்த, 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளார் என, புதிய புகார் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், ஜெயக்குமார் ஜாமின் கேட்டு தொரப்பட்ட வழக்கில், தேர்தல் கள்ளஓட்டு வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்து. ஆனால், அவர் தொழிற்சாலை அகபரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டால், அவரால் சிறையில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கிலும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான பலக்கட்ட விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து ஜெயகுமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.