நெருக்கடியான சூழலில் ஜேர்மனி! மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்



ஜேர்மனியில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்துவருவதால் நாடு நெருக்கடியான சூழலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஏச்சரித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த மாதம் COVID-19 தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டன, ஆனால் சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இப்போது தொடர்ந்து ஒன்பது நாட்களாக தொற்று விகிதம் அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன.

BA.2 என அழைக்கப்படும் Omicron வகை கொரோனா வைரஸ் இன்னும் அதிகமாக பரவிவருவதாகவும், இந்த வாரத்தில் ஜேர்மனியில் பதிவான பாதி எண்ணிக்கை இந்த வகை வைரஸ் தான் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 249 கோவிட் மரணங்கள் மற்றும் 250,000-க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தொற்று விகிதம் கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு 100,000 மக்களில் 1,439 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று கருத வேண்டாம், ஏனெனில் நாட்டில் மீண்டும் புதிய தொற்று எண்ணிக்கை நிலையாக உயர்ந்துவருகிறது, நாம் இன்னும் நெருக்கடியான சூழ்நிலையில் தான் இருக்கிறோம்” என்று ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் மக்களை எச்சரித்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் 200 முதல் 250 பேர் இறக்கும் சூழ்நிலையில் நாம் நிம்மதியாக இருக்க முடியாது, இப்படியே போனால் சில வாரங்களில் மேலும் பல மக்கள் இறந்துவிடுவார்கள். நிலைமை நாம் நினைப்பதை விட மோசமாக உள்ளது” என்று லாட்டர்பாக் கூறினார்.

ஜேர்மன் அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவற்றை மார்ச் 20-ஆம் திகதி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.

முகக்கவசம் அணிவது, சில சூழ்நிலைகளில் சோதனை செய்தல் மற்றும் வைரஸ் “ஹாட் ஸ்பாட்களில்” கூடுதல் நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளுக்குத் தேவைப்படும் புதிய விதிகளை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்கள் மற்றும் விமானங்களில் முகக்கவசம் கட்டாயமாக இருக்கும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.