பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம் ஆத்மி தோற்கடித்து பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று இன்று ஆளுநரிடம் வழங்கினார். சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மியின் புதிய சட்டசபைக்கு வழி வகுக்குமாறும் பரிந்துரைத்தார்.
தொடர்ந்து, ஆட்சி அமைக்க அழைக்குமாறு பகவந்த் மான் நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோர இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக வரும் 16-ம் தேதி பதவியேற்கிறார்.
இவர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார்.
மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பதற்காக நேரில் சென்ற பகவந்த் மான் அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்பு, பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கும் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, அமிர்தசஸில் மார்ச் 13-ம் தேதி ஆம் ஆத்மி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணியும் நடைபெறுவதாகவும் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை 24 மணி நேரமும் பார்வையிட்ட வேட்பாளர் தோல்வி