இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்ட நிலையில், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த இரண்டு அமர்வுகளாகவே இந்திய சந்தைகள் பலத்த ஏற்றத்தினை கண்டன. எனினும் இன்று காலை தொடக்கத்தில் சரிவில் தொடங்கியிருந்தாலும், நேற்று வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுக்க வழிவகுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமானது நேற்றோடு முடிவுக்கு வரலாம். சமாதானம் எட்டப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
பூதகரமாக கிளம்பியுள்ள பிரச்சனை
ஆனால் பெரும் ஏமாற்றத்தினை தரும் விதமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக உக்ரைனுக்கு சாதகமாக சப்போர்ட் செய்யும் விதமாக அமெரிக்கா, ரஷ்யாவின் எல்லை நாடுகளில் போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் சீனாவும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆக இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
சர்வதேச சந்தைகள்
அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில் மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதனையடுத்து அமெரிக்க சந்தைகள் சற்று சரிவிலேயே முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பெரும்பாலான ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்படுகின்றன. அதன் தாக்கமே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
மார்ச் 10 நிலவரப் படி, 1981.15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 4818.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 215.45 புள்ளிகள் குறைந்து, 55,248.94 புள்ளிகளாகவும், நிஃப்டி 74.80 புள்ளிகள் குறைந்து, 16,520.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 293.52 புள்ளிகள் குறைந்து, 55,170.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 86.40 புள்ளிகள் குறைந்து, 16,508.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1070 பங்குகள் ஏற்றத்திலும், 838 பங்குகள் சரிவிலும், 87 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ,பிஎஸ்இ கன்சியூன்மர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி , பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதே மற்ற குறியீடுகள் பச்சனை நிறத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ்ம் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, நெஸ்டில், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, நெஸ்டில், ஹெச்.யு.எல், லார்சன், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.05 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 312.35 புள்ளிகள் அதிகரித்து, 55,776.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 80.7 புள்ளிகள் அதிகரித்து, 16,675.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: sensex, nifty trade struggling amid high volatility 11-03-2022
opening bell: sensex, nifty trade struggling amid high volatility/பரபர தேர்தல் முடிவுகள்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் கவனம்!