பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த அந்நாட்டு காவல்துறையினர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பலவந்தமாக வெளியே இழுத்து வந்து கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை அரசு கட்டுப்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்க ஜாமியத் உலெமா-இ- இஸ்லாம் ஃபசல் என்ற கட்சி தன்னார்வலர்களை ஏற்பாடு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த காவல்துறையினர், 4 எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தன்னார்லவர்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அஞ்சி இம்ரான் கான் கைது செய்ய உத்தரவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.