5 மாநில தேர்தலில் பாஜக மற்றும் ஆம்ஆத்மி வெற்றி. புதிய தமிழகம் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் உத்திரபிரதேசம், உத்திரகண்ட்,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்புலமாக உள்ள பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் முதலமைச்சராக பணியாற்றி தனது தலைமையில் மகத்தான வெற்றியை ஈட்டிய யோகி ஆதித்யநாத் அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்திய பண்பாடு – கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு தலங்களை மீட்டெடுத்து புரனமைத்தும், மிகமிக பின் தங்கி கிடந்த உத்திரபிரதேச மாநிலத்தை தொழில், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை முன்னெடுத்து சென்றதும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தலில் கூடுதலான தொகுதிகளில் வெல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. உத்திரகாண்ட மற்றும் கோவா ஆகிய இரு மாநில முடிவுகளும் எதிர்ப்பார்ப்பை மீறி பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது. இந்த நான்கு மாநில வெற்றி ஊழலுக்கு இடம் கொடுக்காமல் வளர்ச்சியில் கவனம் செலுத்தியக்காக கிடைத்த வெற்றியாகும்.
அதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் 117ல் 92 சட்டமன்ற தொகுதிகளில் வென்று மாநிலத்தை கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அவர்களுக்கும், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.